அடுத்த அதிர்ச்சி... குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு - திருப்பூரில் 2 பேரிடம் போலீசார் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாநகராட்சியின் 6-வது வார்டு கவுண்ட நாயக்கன்பாளையம் பகுதியில் 17.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுள்ளது. இந்தக் குடிநீர் தொட்டியின் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து 4 பேர் கீழே இறங்கி வந்தனர். மதுபோதையில் இருந்த அவர்கள் பொதுமக்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதையடுத்து பொதுமக்கள் நான்கு பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், 2 பேர் மட்டும் சிக்கியுள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த், சஞ்சய் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மது அருந்தியதுடன், தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்ததாகவும், மலம் கழித்துள்ளதாகவும் கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே பொதுமக்கள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததைத்தொடர்ந்து தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. 

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் தெரிவித்துள்ளதாவது:- "மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது சமூக விரோதிகள் சிலர் ஏறி மது அருந்தி தண்ணீரில் குளித்து அசுத்தப்படுத்தி வருகின்றனர். அதனால், அங்கு யாரும் செல்லாமல் இருக்க காவலாளி நியமிக்க வேண்டும் என்றுத் தெரிவித்தனர். 

வேங்கைவயல் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பூரில் நடந்துள்ள இந்தச் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police investigation human wastage mixing in drinking water at tirupur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->