மனைவி இறந்த துக்கத்தில், 02 குழந்தைகளுக்கு பிரியாணியில் விஷம் கலந்துக்கொடுத்து தற்கொலை செய்து கொண்ட கணவர்..!
In grief over the death of his wife a husband committed suicide by mixing poison in the biryani of his 2 children
மனைவி இரத்தத்தில் மனமுடைந்து இருந்த கணவர், தனது இரு குழந்தைகளுக்கு பிரியாணியில் விஷம் கலந்து கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பரலாகேமுண்டி மாவட்டம் ஒடியா பரலாவை சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி கடந்த மார்ச் 21 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து செய்துகொண்டுள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத பெண்ணின் கணவர் மிகவும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அத்துடன் அந்த தம்பதிகளின் ஏழு மற்றும் 11 வயது குழந்தைகளையும் பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளார். அதன்படி, தனது இரு குழந்தைகளுக்கும் பிரியாணியில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு, தானும் அந்த பிரியாணியை உட்கொண்டுள்ளார்.
இதனால் மயக்க நிலையில் கிடந்த மூவரையும் பார்த்த அக்கம்பக்கத்த்தினர், உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்துடன், அவர்கள் மூவரையும் மீட்டு பரலாகேமுண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மகன் இறந்துள்ளார். பின்னர தந்தையும் மகளும் பெர்ஹாம்பூரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்களும் நேற்று காலை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் உட்கொண்ட பிரியாணி மாதிரி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரலாகேமுண்டி இன்ஸ்பெக்டர் பிரசாந்த் பூபதி தெரிவித்துள்ளார். மேலும், மனைவியின் பிரிவால் மன அழுத்தத்தில் இருந்த இவர், சமீபத்தில் தொழிலில் நஷ்டமடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தின் முழு பின்னணி தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Note;- தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:
தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050
இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.
English Summary
In grief over the death of his wife a husband committed suicide by mixing poison in the biryani of his 2 children