விரைவில் ரமணா 2 படம் - இயக்குனர் முருகதாஸ் அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். 

இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற 23ம் தேதி திரைக்கு வர  தயாராகி வருகிறது. இதற்கிடையே இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சண்முக பாண்டியன், பிரேமலதா விஜயகாந்த், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது, "ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் அவர்கள் செய்தார்கள். 

எல்லோரும் விஜயகாந்த் குறித்து பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாக கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது.

விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களை கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்... கண்டிப்பாக ரமணா 2 படம் எடுக்கலாம். மீண்டும் கேப்டனை திரையில் காண்பிப்போம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director ar murugadoss announce ramana 2 movie update


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->