'டிஜிட்டல் கைது' என கூறி, ஓய்வு பெற்ற டாக்டரிடம் ரூ.2.2 கோடி மோசடி: 02 சைபர் குற்றவாளிகள் கைது..! - Seithipunal
Seithipunal


டெல்லியை சேர்ந்த 92 வயதான ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரை, டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி, ரூ.2.2 கோடி மோசடி செய்த இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர்.

கடந்த மார்ச் 12-ஆம் தேதி,  92 வயதான ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணருக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையின் அதிகாரிகள் என்று கூறி பல வீடியோ அழைப்புகள் வந்துள்ளது. அத்துடன், அவர் அவர் மீது எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,நீங்கள்  கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டியுள்ளனர்.

அத்துடன், குறித்த நபர் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரை வெளியே எங்கும் செல்ல முடியாமல் அறைக்குள் அடைத்து வைத்திருந்துள்ளனர். மேலும், தொடர்ச்சியான  வீடியோ அழைப்புகள் மூலம் மிரட்டல், போலியான ஆவணங்களைக் காட்டி ஏமாற்ஏறுதல், போலியான வீடியோ கான்பரன்ஸ் முறையிலான நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனால் பயந்து போன 92 வயதான ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர், தனது அனைத்து டெபாசிட் தொகைகளை, மோசடி செய்பவர்களின் அறிவுறுத்தலின்படி மூன்று வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பின்னர் தான் ரூ.2.2 கோடி பணத்தை இழந்த பிறகு, தான்,  ஏமாற்றப்பட்டதை அறிந்து டில்லி போலீசின் சைபர் குற்றப்பிரிவில் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த விசாரணைக்கு பின்னர் சைபர் குற்றத்தடுப்பு துணை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் திவாரி கூறியதாவது: விரிவான கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல்-தடம் பகுப்பாய்வுக்குப் பிறகு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், அமித் சர்மா என்ற ராகுல் கைது செய்யப்பட்ட்டுள்ளதாகவும், அவனது கூட்டாளி ஹரி ஸ்வர்கியாரி அசாமின் குவஹாத்தியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவர்களிடமிருந்து மூன்று மொபைல் போன்கள், குற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் பிற குற்றவியல் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர்களுடன் வெளிநாட்டிலிருந்து செயல்படக்கூடியவர்கள் உட்பட கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களை அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக ஹேமந்த் திவாரி குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

02 cyber criminals arrested for defrauding a retired doctor of Rs 2 point 2 crore by claiming to have made a digital arrest


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->