இந்தாண்டுக்கான சுதந்திர தின விழாவையொட்டி மூவர்ண கொடி யாத்திரை: பாஜகவில் மாநில அளவிலான குழுவை நியமித்துள்ள நயினார் நாகேந்திரன்..!
Nainar Nagendran has appointed a state-level committee in the BJP for the tricolor flag procession on the occasion of Independence Day celebrations
இந்தாண்டு (2025) சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மூவர்ண கொடியாத்திரை (திரங்கா), வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஆக.10-ஆம் தேதி முதல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மூவர்ணக் கொடி யாத்திரை மற்றும் இதர பணிகளை ஒருங்கிணைக்க தமிழக பாஜகவில் மாநில அளவிலான குழுவை நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் மூவர்ணக் கொடி யாத்திரை உள் ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்கவும், வழி நடத்தவும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி, இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, மகளிர் அணி தலைவர் கவிதா காந்த், ஓபிசி அணி தலைவர் வீர திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, மகாசுசீந்திரன், தென்காசி மாவட்ட அமைப்பாளர் மகாராஜன் ஆகியோர் செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Nainar Nagendran has appointed a state-level committee in the BJP for the tricolor flag procession on the occasion of Independence Day celebrations