சுதந்திர பூங்காவில் சுதந்திரமாக வளர முடியாத மரங்கள்...! ராகுல் போராட்டத்துக்கு இடையூறாக இருக்கும் என்று வெட்டி சாய்ப்பு..!
Trees cut down in Bengaluru Freedom Park saying they would hinder Rahul protest
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் முறைகேடு நடந்துள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 05-ஆம் தேதி பெங்களூரில் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தவுள்ளது.
இதற்காக அங்கு பல ஆண்டுகளாக இருந்த மரங்களை காங்கிரஸ் கட்சியினர் வெட்டிச் சாய்த்ததாக புகார் எழுந்துள்ளது. சுதந்திர பூங்காவில் நடக்கவுள்ள இந்த போராட்டத்தில் மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உட்பட, பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அங்கு போலீஸ் அதிகாரிகள், முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
குறித்த போராட்டத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால், சுதந்திர பூங்காவில் உள்ள மரங்களை வெட்டும்படி, உப்பார்பேட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மஹாதேவசாமி உத்தரவிட்டுள்ளார். ப ஆண்டுகளாக அங்குள்ள மரங்களை போலீசார் வேருடன் புடுங்கியும், வெட்டி அகற்றுகின்றனர். இதன் காரணமாக பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரங்களை வெட்டுவதை, பொது மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர்.
இருப்பினும், மரங்களை வெட்ட உத்தரவிட்ட இன்ஸ்பெக்டர் மஹாதேவசாமி மீது பெயரளவில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் செய்து உள்ளனர்.
English Summary
Trees cut down in Bengaluru Freedom Park saying they would hinder Rahul protest