பாகிஸ்தான் விமானப்படை தளபதியுடன் வங்கதேச ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ரகசிய பேச்சுவார்த்தை: ஆலோசனை வழங்கிய சீனா: நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் விமானப்படை தளபதியுடன் வங்கதேச ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதை இந்திய உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது. குறித்த ராணுவ சந்திப்பில், 'ட்ரோன்' பரிமாற்றம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் விவாதித்துள்ளதாகவும், இதனால்,  நம் படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பாகிஸ்தான் அண்டைய நாடக இருந்தாலும் நட்பு நாடாக இல்லாமல் எதிரி நாடவே ஆரம்பத்தில் இருந்து இருந்து வருகிறது. குறிப்பாக அந்நாடு பயங்கரவாதிகளை ஆதரித்து, இந்தியாவிற்கு தொல்லை கொடுத்து வருகிறது.போதாதற்கு சீனாவும் எல்லையில் வேறு மாதிரியான வகையில் தொல்லை கொடுத்து வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை குவிப்பது, கட்டுமானம் கட்டுவது என பல நெருக்கடிகளை  கொடுத்து வருகிறது.

அடுத்ததாக, வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த வரையில், அந்நாட்டுடனான உறவு சுமுகமாக இருந்து வந்தது. உள்நாட்டு அரசியல் மோதல் காரணமாக அவர் ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றதும், நிலைமை தலைகீழாகியுள்ளது.

சீன ஆதரவாளரான அவர், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் - வங்கதேசம் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே, கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த ரகசிய ராணுவ சந்திப்பை, இந்திய உளவுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் வைத்து, பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஜாகீர் அகமது பாபர் - வங்கதேச ஆயுதப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் இடையே, கடந்த ஏப்ரல் 15 - 19-ஆம் தேதி வரை ரகசிய சந்திப்பு நடந்ததாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் பற்றியும், விமானப்படையில் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 'ட்ரோன்' தயாரிப்பு, தகவல் தொடர்பு, விண்வெளி நடவடிக்கைகள், சைபர் போர் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்பட்டுள்ளது.

ஆனால், எதையும் குறிப்பிடும்படி உரையாடல் நடக்கவில்லை என்றாலும், ட்ரோன் தயாரிப்பில் பாகிஸ்தான் -வங்கதேசம் ஆகியவை இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன என்றும் தெரியவருகிறது.

அதாவது, சீனாவின் உதவியுடன் ட்ரோன் தயாரிப்பை மேம்படுத்தி வரும் பாகிஸ்தான் தற்போது அந்த தொழில்நுட்பத்தை வங்கதேசத்துடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது. அத்துடன், ஒருங்கிணைப்பு திறன் வான்வழி நடவடிக்கைக்கு பயன்படும் நிகழ் நேர தகவல் தொடர்பு சேனலை வங்கதேசம் பயன்படுத்தவுள்ளது.

இது, வங்கதேசத்தின் விமானப்படையின் இயங்கு தன்மையை கணிசமாக அதிகரிக்கும் என்றும், ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதில் முக்கியமாக பாகிஸ்தான்  - வங்கதேசம் இடையே நடந்த இந்த ரகசிய ராணுவ சந்திப்பில், மூன்றாவது நபராக சீனா பங்கேற்று ஆலோசனை வழங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

அதில், நிகழ்நேர போர் சூழல்களை உருவகப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 'ஆக்மென்டட் ரியாலிட்டி, மெய்நிகர் ரியாலிட்டி' அமைப்புகளை பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேச விமானப்படைகள் ஆராய்ந்து வருகின்றதாகவும், இந்த அமைப்புகள் தற்போது உலகில் பெரிய நாடுகளிடமே உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ரகசிய சந்திப்பின் போது, வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீனை நீக்குவது பற்றியும் பேசப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ராணுவ பின்புலம் கொண்ட நபரை நியமிக்க பாகிஸ்தான் விரும்புவதும், இதற்கான வேலைகளும் திரை மறைவில் நடக்கின்றன என்று இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Top Bangladeshi military officials held secret talks with Pakistan Air Force Chief


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->