மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: யோகி ஆதித்யநாத்தின் பெயரை குறிப்பிடும்படி அடித்து சித்ரவதை: அரசு தரப்பு சாட்சி பரபரப்பு வாக்குமூலம்..! - Seithipunal
Seithipunal


கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், குண்டு விடுப்பு சம்பவம் இடம்பெற்றது. இதில், ஆறு பேர் கொல்லப்பட்டதோடு, 101 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த போது, மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காவி பயங்கரவாதம் தான் காரணம் என, காங்., அரசு அப்போது குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை குறிப்பிடும்படி, மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் அடித்து சித்ரவதை செய்ததாக, அரசு தரப்பு சாட்சி ஒருவர் சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினனட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். முதலில் இந்த வழக்கை, மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப்படை விசாரித்த நிலையில்,பின்னர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து 17 ஆண்டுகளாக விசாரணைநடந்து வந்த நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 31-இல் தீர்ப்பு அளித்தது.

அதாவது, துன்புறுத்தல் குறித்து உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறி விட்டதால், பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேரை விடுதலை செய்து, சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோதி தீர்ப்பளித்தார். இது தொடர்பான 1,000 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் முழு விபரம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையின் போது, சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியான மிலிந்த் ஜோஷிராவ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: 

தன்னை குற்றவாளி போல பயங்கரவாத தடுப்பு படையினர் நடத்தியதாகவும், அவர்களது அலுவலகத்தில் ஏழு நாட்கள் அவரை அடைத்து வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வழக்கில், யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அசிமானந்த், இந்திரேஷ் குமார், பேராசிரியர் தேவ்தர், சாத்வி, காகாஜி ஆகியோரின் பெயரை குறிப்பிடும்படி, அவரை அடித்து சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு அவர்களது பெயரை சொன்னால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக பயங்கரவாத தடுப்பு படையினர் சித்திரவதை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அதற்கு (மிலிந்த் ஜோஷிராவ்) தான் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அப்போதைய போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீராவ் மற்றும் பரம் பீர் சிங் ஆகியோர், தன்னை அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் நிராகரிப்பு நீதிமன்றத்தில், மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், மிலிந்த் ஜோஷிராவின் வாக்குமூலம் வேறு மாதிரியாக இருந்தது. ஆனால், அவர் நீதிமன்றில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நடந்ததை நீதிபதியிடம் கூறியுள்ளார்.

இதன் மூலம், பயங்கரவாத தடுப்புப் படையின் முகமூடி கிழிக்கப்பட்டதாகவும், இதை பதிவு செய்த சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோதி, தன்னிச்சையாக வற்புறுத்தி அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை ஏற்க முடியாது எனக்கூறி நிராகரித்தார்.

இந்த வழக்கு தொடர்பில் முன்னதாக  ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாக, விசாரணை பிரிவில் இருந்த பயங்கரவாத தடுப்புப்படை முன்னாள் அதிகாரி மெஹ்பூப் முஜாவார் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prosecution witness testifies that he was beaten and tortured to mention Yogi Adityanath name in Malegaon blast case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->