பழி வாங்குகிறதா காந்தாரா? இரண்டு நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்! - Seithipunal
Seithipunal


2022ம் ஆண்டு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் பெரும் வெற்றிபெற்று, ரசிகர்கள் மனதில் ஓர் ஆழமான இடத்தை பெற்றது.

பஞ்சுருளி தெய்வத்தை மையமாகக் கொண்டு உருவாகிய அந்தப் படம், அதன் தொடராக ‘காந்தாரா 2’ எனும் இரண்டாம் பாகத்துடன் திரும்பி வருகிறது. தற்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு உடுப்பி மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பில் ஈடுபட்ட நடிகர்கள் மரணம் அடைந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 32 வயதுடைய துணை நடிகர் கபில், கொல்லூர் அருகே சவுபர்ணிகா ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதே இடத்தில் துணை நடிகர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. அதற்குள் ஏற்பட்ட அதிர்ச்சிக்கே இன்னொரு சோக செய்தி உடனே வந்தது.

‘காந்தாரா 2’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராகேஷ் பூஜாரி, உடுப்பியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்த திடீர் மரணங்கள் படக்குழுவில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. மலைவாழ் மக்களின் ஆன்மிக நம்பிக்கைகள் சூழ ‘காந்தாரா 2’ இப்போது பழிவாங்குகிறதா என்ற அச்சமும் திரையுலகில் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kantara 2 film crew actor dies


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->