விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வாலிபர்: சிறை தண்டனை விதித்துள்ள சிங்கப்பூர் நீதிமன்றம்..!
Indian man sentenced to prison for sexually assaulting flight attendant
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணிபுரியும் விமான பெண்ணுக்கு இந்தியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமானத்தில் பயணம் செய்த 20 வயது இந்திய வாலிபரான ரஜத் என்பவர் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதோடு, பணிப்பெண்ணை பின்பக்கம் இருந்தபடி, பிடித்த அவர், அப்படியே கழிவறையை நோக்கி அவரை தள்ளி சென்றுள்ளார்.
இதனால், அந்த பணிப்பெண் அதிர்ச்சியடைந்ததோடு, மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 20 வயதுடைய இந்திய வாலிபரின் செயலால், மனவருத்தம் மற்றும் கலக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் குறித்த விமானம் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் சென்றடைந்ததும் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணையின்போது, துணை அரசு வழக்கறிஞரான லாவ் கூறியதாவது:- வர்த்தக விமான பயணம் என்பது அதிக நெருக்கடியான சூழலை கொண்டது. நெருங்கிய அளவில் தொடர்பு இருக்கும்போது, விருப்பமில்லாத உடல் தொடர்பை கண்டறிவது என்பது கடினம் என கூறியுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கில் நடந்த விசயங்களை இந்திய வாலிபர் ரஜத் ஒத்துக்கொண்டுள்ளார் . விசாரணை முடிவில், வாலிபருக்கு 03 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Indian man sentenced to prison for sexually assaulting flight attendant