தொட்டிலில் தூங்கிய குழந்தையை கவ்விக் சென்ற தெருநாய் - திருவாரூரில் பயங்கரம்.!!
street dog clamp child in thiruvarur
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே கூத்தாநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஒன்றரை வயதில் பச்சிளம் ஆண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு அந்த இளம்பெண் வீட்டுவேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த தெருநாய் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கவ்விச்சென்றது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பாட்டி, தெருநாயை விரட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது, குழந்தையின் பாட்டியையும் தெருநாய் கடித்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடி பார்த்த இளம்பெண், தெருநாயை விரட்டியுள்ளார்.
பின்னர், தெரு நாய் கடித்ததில் காயமடைந்த குழந்தை மற்றும் பாட்டியை அந்த இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
street dog clamp child in thiruvarur