சீமான் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
chennai high court order action against ntk leader seeman
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது நீதித்துறை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிய உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
English Summary
chennai high court order action against ntk leader seeman