வெட்கக்கேடு... அடுத்தவர் பெற்ற பிள்ளைக்குப் பெயர் சூட்ட அலையாதீர்கள்... திமுக அமைச்சருக்கு பாஜக கண்டனம்!
TN BJP Condemn to DMK Minister TRB Raja
தமிழக பாஜக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ், சுமார் ரூ.5,532 கோடி முதலீட்டில் ரூ.44,406 கோடிக்கும் அதிகமான உற்பத்தி மதிப்புகளைக் கொண்ட 7 திட்டங்களில் 5 திட்டங்களை நமது தமிழகத்திற்கு வாரி வழங்கியுள்ளது நமது மத்திய அரசு. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானத் தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்.
ஆனால், சொந்த வாரிசுகளைத் தவிர வேறு யாரைப் பற்றியும் கவலைப்படாத உங்கள் விளம்பர மாடல் அரசு, வழக்கம்போல இதிலும் ஸ்டிக்கர் ஒட்ட முண்டியடிப்பது வெட்கக்கேடானது.
வருடாவருடம் முதலீடுகளை ஈர்ப்பதாக உங்கள் முதல்வர் போட்ட சுற்றுலா நாடகங்கள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன, போக்ஸ்கான் நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்போவதாகக் கூறிய உங்கள் உருட்டுகளும் அம்பலப்பட்டுவிட்டன, நமது அண்டை மாநிலமான ஆந்திரா முதல்வர் இருந்த இடத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தைக் கொக்கி போட்டுத் தூக்கிவிட்டார்.
இதிலெல்லாம் மனமுடைந்து போய் எப்படியாவது மக்கள் மத்தியில் நாமும் நற்பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியில் கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் மத்திய அரசு கொடுத்த திட்டங்களுக்கு நீங்கள் உரிமைகோரிக் கொண்டிருக்கிறீர்களே, எதற்கு இந்த பிழைப்பு?
திமுக ஆட்சியில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த வெள்ளையறிக்கை கேட்டதற்கு, வெள்ளைப் பேப்பரை எடுத்து நீட்டி நீங்கள் நக்கலடித்ததில் இருந்தே தெரிகிறது உங்கள் லட்சணம். ஆகையால், உங்கள் முதலீட்டு நாடகங்கள் எதுவும் இனி தமிழகத்தில் எடுபடாது. கடையை சாற்றிவிட்டு கிளம்புங்கள், காற்று வரட்டும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
TN BJP Condemn to DMK Minister TRB Raja