ரீலிஸ் வீடியோ எடுக்க சென்று யமுனா ஆற்றில் விழுந்த பாஜக எம்எல்ஏ.. வைரல் வீடியோ!
bjp mla yamuna river
வட இந்திய மாநிலங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக சாத் பூஜை திகழ்கிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஆயிரக்கணக்கானோர் டெல்லியில் யமுனா ஆற்றில் நீராடச் செல்லத் தொடங்கினர். ஆனால், யமுனா ஆற்றின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாக சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில், டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங், யமுனா ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு, ஆற்றின் நீர் குடிக்கத்தக்க அளவுக்கு சுத்தமானது என கூறி, ஒரு பாட்டிலில் நீர் எடுத்து கேமரா முன்னிலையில் குடித்தார்.
ஆனால், ரீல்ஸ் பதிவு செய்யும் போதே எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை ஆற்றிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, நெட்டிசன்கள் பல்வேறு வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.