இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை: இரு நாடுகளும் முடிவு..!
Measures to ease the tension between India and Pakistan Both countries decide
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதால், தற்போது எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையை தொடர இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 09 பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கப்போவதாக கூறி அப்பாவி மக்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்தது.
இதனை தொடர்ந்து, இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. குறித்த தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் ராணுவ டி.ஜி.எம்.ஓ., இந்திய ராணுவ டி.ஜி.எம்.ஓ.,விடம் கெஞ்சியதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதன் பிறகு கடந்த 10-ஆம் தேதி இரு நாட்டு டி.ஜி.எம்.ஓ.,க்களும் ஹாட்லைன் மூலம் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 10-ஆம் தேதி இரு நாட்டு டி.ஜி.எம்.ஓ.,க்கள் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில், எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையை தொடர இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இது குறித்து சூழ்நிலை மாற்றத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Measures to ease the tension between India and Pakistan Both countries decide