ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்! டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!
TASMAC Scam Enforcement Directorate custody investigation Complete
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் மணப்பாக்கம் சி.ஆர்.புர இல்லத்தில், துப்பாக்கி பாதுகாப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முன்னெடுத்தனர்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பான புகாரின் அடிப்படையில் ரூ.1,000 கோடி அளவிலான நிதி மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாகனுடன் தொடர்புடைய மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகனின் வீடுகளிலும், தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
காலை தொடங்கி நடந்த சோதனையின் ஒரு கட்டமாக, அவர்களின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட நிதி ஆவணங்கள் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சூளைமேடு மற்றும் கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே நிறுவன அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்தும், விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற அழைத்து சென்றனர்.
இந்நிலையில், சுமார் 5 மணிநேரம் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், பின்னர் அவரை விடுவித்தனர்.
English Summary
TASMAC Scam Enforcement Directorate custody investigation Complete