முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்.. ஓசூர் அருகே 3.60 லட்சம் ரூபாய் பணம், 8.5 சவரன் நகை பறிப்பு!
Masked robbers wreak havoc 3.60 lakh rupees in cash and 8.5 sovereigns of jewelry stolen near Hosur
ஓசூர் அருகே தோட்டத்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை,பணம் கொள்ளையடித்த முகமுடி அணிந்து காரில் வந்த 7பேரை போலிசார் தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தொட்டமெட்டறை கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தைகை எடுத்து தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர்கள் சஜ்ஜலப்பட்டி கிராமத்தை கோவிந்தம்மாள்(55) - ராஜா(60 இவர்கள் 12 ஏக்கர்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள்.
கிராமத்திலிருந்து ஒருகிலோ மீட்டர் தொலைவில் இவர்கள் வீட்டிற்கு செல்லும் வகையில் மண்சாலை உள்ளது.நேற்றிரவு கோவிந்தம்மாள், ராஜா ஆகியோருடன் மருமகன் ராமச்சந்திரன்(33), பேத்தி வர்ஷினி(9) என 4பேர் இருந்தநிலையில், இரவு 9 மணியளவில் முகமுடி அணிந்த 7 பேர் காரில் வந்துள்ளனர்..
கார் மீண்டும் செல்லுவதற்கு தயாராக திருப்பி நிறுத்தி வைத்துவிட்டு வந்துள்ள கொள்ளையர்கள் வீட்டிற்கு வெளியே இருந்த கோவிந்தம்மாளை ஒருவர் கத்தியை காட்டி மிரட்ட மீதமிருந்த 6பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்..கோவிந்தம்மாள் அணிந்திருந்த தோடு, தாலி சங்கிலி என 8.5 சவரன் தங்கநகைகளை பறித்துக்கொண்டுள்ளனர்..
கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் மருமகன் ராமச்சந்திரன் வீட்டிலிருந்த கத்தியால் கொள்ளையர்களை தாக்கி உள்ளார்.. இதில் கைகலப்பாக மாறிய நிலையில் ராமச்சந்திரன் கொள்ளையன் ஒருவனை தலையில் பலமாக தாக்கியதில் வெட்டுக்காயம் ஏற்ப்பட்டதாகவும், ராமச்சந்திரனை கொள்ளையர்கள் தாக்கியதில் ரத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
பீரோவில் இரு இடங்களில் இருந்த 4.80 லட்சம் ரூபாய் பணத்தில் 3.60 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் கொள்ளையடித்து சொன்றுள்ளனர்..இந்தநிலையில் உத்தனப்பள்ளி போலிசார் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Masked robbers wreak havoc 3.60 lakh rupees in cash and 8.5 sovereigns of jewelry stolen near Hosur