'பாஜகவோடும், பாமகவோடும் எப்போதும் உறவு இல்லை, வன்னிய சமூகத்தினரோடு உறவு உண்டு': திருமாவளவன் பேச்சு..!
Never had any relations with BJP or PMK had relations with Vanniya community Thirumavalavan speech
திருச்சியில் வரும் 31-ஆம் தேதி விசிக சார்பில் 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற மாபெரும் எழுச்சி பேரணி நடைபெறவுள்ளது. இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு திருமாவளவன் பேசியதாவது;
"விசிகவால் நடத்தப்படும் மாநாட்டின் பெயர்களுக்கு பொருள் உள்ளது என்றும், விசிகவினால் நடத்தப்பட்ட அனைத்து மாநாட்டிலும் பல்வேறு கருத்துக்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த அரசியல் கட்சிகளும் தங்களை போன்று மாநாடு நடத்தியதில்லை எனவும், எல்லா தொகுதிகளிலும் இந்துக்களின் வாக்குகளை விட முஸ்ஸீம்களின் வாக்குகள் குறைவு, வாக்கு வங்கிக்காகவும்,தேர்தல் அரசியலுக்காகவும் வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற கூறவில்லை என்று பேசியுள்ளார்.

அத்துடன், விசிகவிற்கு தேர்தல் களத்தினையும் தாண்டி ஒரு கோட்பாடு உள்ளது என்று குறிப்பிட்ட அவர், அதாவது, அரசியலமைப்பு சட்டத்தினை பாதுகாக்க வேண்டும் என்றும், சாதி அரசியலை மிரட்டி வைத்து கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் அரசியல் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமா ஸ்டார் வந்தால் கூட விசிகவிற்கு போட்டியாக வர முடியாது என்றும், விசிகவின் களமே வேறு என்று தெரிவித்துள்ளார். வேங்கைவயல் குறித்து ஏன் பெரிய அளவில் திருமாவளவன் பேசவில்லை, போராட்டம் செய்யவில்லை என சிலர் தெரிவிக்கிறார்கள்.ஆனால், அதிமுக கூட வேங்கைவயல் குறித்து பெரிய அளவில் போராட்டம் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாஜகவோடும், பாமகவோடும் எப்போதும் உறவு இல்லை, வன்னிய சமூகத்தினரோடு எங்களுக்கு உறவு உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Never had any relations with BJP or PMK had relations with Vanniya community Thirumavalavan speech