10 ம் வகுப்பு ரிசல்ட் ..கடந்த ஆண்டை விட 3.08 கூடுதல் தேர்ச்சி..36-வது இடம் பிடித்த திருவள்ளூர் மாவட்டம்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 26 அரசு பள்ளிகள் உட்பட 97 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது.இது  கடந்த ஆண்டை விட 3.08 கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்,இது  மாநில அளவில் 36-வது இடம் பிடித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி முதல்  ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற  10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  நேற்று  காலை 9.10மணி அளவில் வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மொத்தமுள்ள 440 பள்ளிகளை உள்ளடக்கிய 147 தேர்வு மையங்களில் 15588 மாணவர்களும், 15717 மாணவிகளும் என மொத்தம் 31305 மாணக்கர்கள் தேர்வு எழுதினர். .

இதில் 13550 மாணவர்கள், 14499 மாணவிகள் என மொத்தம் 28049 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மாணவர்கள் 86.93 சதவீதம் தேர்ச்சியும், மாணவிகள் 92.25 சதவீதம் தேர்ச்சியும் ஆக மொத்தம் 89.50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023-2024 ம் கல்வியாண்டில் 86.52 சதவீதம் தேர்ச்சி சதவீதம் ஆகும். எனவே கடந்த ஆண்டை விட 3.08 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கிறது.

2024-2025 ம் கல்வியாண்டில் 225 அரசுப் பள்ளிகளில் பயிலும் 7838 மாணவர்கள்,  8265 மாணவிகள் என மொத்தம் 16103 தேர்வு எழுதினர். இதில்  6345 மாணவர்கள், மற்றும்  7313 மாணவிகள் மொத்தம் 13558  மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 80.95 சதவீதம் மாணவிகள் 88.48 சதவீதம் என மொத்தம் 84.82 சதவீதம் ஆகும். ஆனால் 2023-2024 ம் கல்வியாண்டில் 80.06 சதிவீதம்  தேர்ச்சி ஆகும். எனவே கடந்த ஆண்டை விட 3.76 சதவீதம் தேர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கிறது.வருவாய் மாவட்ட அளவில் 26 அரசு பள்ளிகள் உட்பட 97 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10th standard result an increase of 3.08 in pass percentage compared to last year Thiruvallur district secured the 36th position


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->