தூத்துக்குடியில் 7 திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்!
In Tuticorin MP Kanimozhi inaugurated 7 project works
தூத்துக்குடியில் அங்கன்வாடி, ரேஷன் கடை உள்ளிட்ட 7 திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 7 இடங்களில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் நிதித்திட்டம், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.16 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினையும், சத்திரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், லெவிஞ்சிபுரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், ஜார்ஜ் ரோடு பகுதியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.14.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், குரூஸ்புரம் மற்றும் அமுதா நகர் பகுதிகளில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.27 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களையும் மற்றும் அமுதா நகர் பகுதியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.13.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும் என மொத்தம் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களின் கோடை கால விடுமுறையில், ஏனென்று கேள் எனும் தலைப்பில் நடைபெறும் கோடை கால அறிவியல் பயிற்சி முகாமினை கனிமொழி எம்.பி பார்வையிட்டு, வினாடி வினாப் போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையா் மதுபாலன், துணைமேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் காந்திநாதன், சிவில் சப்ளை தாசில்தாா் செல்வக்குமாா் கவுன்சிலர்கள் பவாணி, மெட்டில்டா, சரண்யா, பேபி ஏஞ்சலின், பாப்பாத்தி, நாகேஸ்வாி, ரெக்ஸின், ராமகிருஷ்ணன், சரவணக்குமாா், வைதேகி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, அணி துணை அமைப்பாளர்கள் ஐடி விங் பிரபு, அருணாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தா், ஐடி விங் அண்ணாதுரை, வட்டச் செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ் மகாராஜா, மாரி ஈஸ்வரன், ரவீச்சந்திரன், சுரேஷ், சரவணன், லியோஜான்சன், ஜெயசிங், செல்வராஜ் பகுதி அணி நிர்வாகிகள் சூர்யா, ஜாக்ஸன், சந்தன முனீஸ்வரன், தொண்டரணி சங்கர், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், ஜெயக்குமாா், மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வம், உதவி பொறியாளர் சரவணன். பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமாா், மாவட்ட திட்ட அலுவல பொறுப்பு காய்த்திரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முனைவர் சாந்தகுமாரி, மாநில செயலாளர் சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
In Tuticorin MP Kanimozhi inaugurated 7 project works