கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..  ஆற்று நீரில் இரசாயன நுரைகள் கலப்பு!  - Seithipunal
Seithipunal


மழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால் ஆற்று நீரில் இரசாயன நுரைகள் ஆற்றில் வெண்மையாக சென்றது,இதனால் விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கிருஷ்ணகிரி, பாரூர், ராயக்கோட்டை சூளகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

நேற்று தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இந்த மழையால் ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அணைக்கு வினாடிக்கு 311 கன அடி நீர் வரத்தாக இருந்தது. இந்த நிலையில் மழை காரணமாக இன்று கெலவரப்பள்ளி அணைக்கு 532 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், இதில் தற்போது 41.33 அடிவரை நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்து பாதுகாப்பு கருதி 412 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் அணையில் இருந்து  தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் இரசாயன நுரைகள் வெள்ளை போர்வை போர்த்தியது போல செல்கிறது. மழைக் காலங்களில் இரசாயன நுரைகள் ஆற்றில் செல்வது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.இதனால் விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Increase in water flow to the Kelavarappalli Dam Chemical substances mixed in the river water


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->