10 லட்சம் பாலஸ்தீனியர்களை லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்!
Trumps plan to resettle 1 million Palestinians in Libya
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 லட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லிபியா அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதிகாசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.சிலரை பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது.இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.இதனிடையே, காசா முனையில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றிவிட்டு அதை அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டுவர அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார்.
இந்நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 லட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லிபியா அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ,பாலஸ்தீனியர்களை லிபியா அரசு ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுளது.
English Summary
Trumps plan to resettle 1 million Palestinians in Libya