பொண்ணு ரெடி..விரைவில் திருமணம் - விஷால் அறிவிப்பு!
Girl is ready wedding soon Vishal announcement
தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடைபெறும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். இந்த நிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:நடிகர் சங்க கட்டிடம்தான் என் கனவு.நான் வெறும் 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் 9 ஆண்டுகள் தாண்டிவிட்டது.நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையும் நிலையில் இருக்கிறது. ஆகஸ்ட் 15-ந்தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டம் வகுத்துள்ளோம்.

எனக்கு திருமணம் உறுதி. என் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ந்தேதி கூட எனக்கு திருமணம் நடைபெறலாம். இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.
காதல் திருமணம்தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Girl is ready wedding soon Vishal announcement