ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி ஒரு மணிமகுடமாக இருக்கும் - திமுக அமைச்சர் ஆருடம்!
DMK Minister say about Erode By Election
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்த நாளையிலிருந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது தீவிர பிரச்சாரத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என்று களம் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி ஒரு மணி மகுடமாக இருக்கும்.

திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி ஏராளமான வளர்ச்சியை கண்டுள்ளது" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வளையல் காரர் வீதியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "மக்கள் அளிக்கும் ஆதரவை காணும்போது இளங்கோவன் வெற்றி உறுதியாகி இருப்பதை உணர முடிகிறது.
அவரின் வெற்றி வெற்றி என்பது நிச்சயக்கப்பட்ட ஒரு வெற்றி" என்று அமைச்சர் பெரிய கருப்பன் நம்பிக்கை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK Minister say about Erode By Election