நேற்றைய அளவிலேயே நீடிக்கும்... தர்மபுரி ஒகேனக்கல்லின் நீர்வரத்து....! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக, தர்மபுரி  ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது. இன்று 8 மணியளவில் கண்காணித்தபோது அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

அதன் பிறகு, அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.குஷியாக மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

இதில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

water flow Dharmapuri Ogenakkal continue at yesterday level


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->