ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்!” – அண்ணாமலை கோரிக்கை!
Rights that are due to contractual employees must be provided Annamalais demand
தமிழக குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் பல ஆண்டுகளாக நிலவி வரும் குறைந்தபட்ச ஊதிய வஞ்சனைகள், தொழிலாளர் உரிமை மீறல்கள் குறித்து பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தையும், தி.மு.க. அரசுக்கு நேரடி கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:20 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்கள் அடிப்படை உரிமைகள் இன்றியே பணியாற்றுகின்றனர்.ESI, EPF, வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, விபத்துக் காப்பீடு உள்ளிட்டவைகள் வழங்கப்படவில்லை.
ஊதியம், வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல், கையில் ரொக்கமாக வழங்கப்படுகிறது.ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தங்களை மீறியும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் புறக்கணித்து வருகின்றனர்.
தொழிலாளர் நலத்துறை மற்றும் நகர்ப்புற மேலாண்மைத் துறை அமைச்சர்கள் பின்புலத்தில் இருப்பதால்தான் இந்த ஊழல் பெரிதாக உள்ளது எனவும், இது ஒரு திமுக அரசு – ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சதி எனவும் கூறியுள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி, சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பிரச்சனை வியாபகமாக உள்ளது. தொடர்ந்து உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்கள் நடைபெறலாம் என எச்சரிக்கை.
மேலும் ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்,ESI, EPF உள்ளிட்ட பலன்கள் வழங்கப்பட வேண்டும்,வார விடுமுறை, பண்டிகை விடுமுறை அமல்படுத்தப்பட வேண்டும்,தொழிலாளர்களுக்கான விபத்துக் காப்பீடு மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்
போனஸ் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட வேண்டும்,சம்பள பாக்கி உடனடியாக செலுத்தப்பட வேண்டும்,ஒப்பந்தத்தை மீறிய ஒப்பந்ததாரர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
“ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தாலே, தமிழகமே பாதிக்கப்படும்!” என எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை, இந்த பிரச்சனையில் திமுக அரசு உடனடி தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும், தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Rights that are due to contractual employees must be provided Annamalais demand