சைனீஸ் ஹாட் நூடுல்ஸ்... இத மட்டும் செஞ்சு கொடுத்துப் பாருங்க... உங்க கெஸ்ட் அசந்து போவாங்க...
Chinese Hot Noodles Just make this and serve it Your guests will be amazed
சைனீஸ் ஹாட் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
நூடுல்ஸ் - 2 பாக்கெட்
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 2
முட்டைக்கோஸ் - 2 கப்
காரட் - 1 கப்
பீன்ஸ் - 1 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெங்காயத்தாள் - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை :
முதலில், சைனீஸ் ஹாட் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் நூடுல்ஸை கொதிக்கும் நீரில் வேக வைக்கவும். நூடுல்ஸ் வெந்ததும், அதை ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடித்து விட்டு, குளிர் நீரால் நன்கு அலச வேண்டும். சுத்தமாக நீரை வடிகட்டி விடவும். பிறகு, காய்ந்த மிளகாயை நீர் விட்டு, கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின், ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு காய்ந்ததும், அதில் அரைத்த மிளகாய் விழுதை போட்டு வதக்கி, அதில் அனைத்து காய்களையும், பட்டாணியையும் போட்டு 2 நிமிடம் வதங்கினதும் உப்பு, அஜினமோட்டோ போட்டு மிளகாய் போட்டு கிளறி, வேக வைத்து எடுத்து வைத்துள்ள நூடுல்ஸை காய்கறிகள் கலந்துள்ள கலவையில் போட்டு, அனைத்து காய்களுடனும் சேருமாறு கிளறி, அதில் வெங்காயத்தாள் போட்டு பரிமாறவும்.
English Summary
Chinese Hot Noodles Just make this and serve it Your guests will be amazed