கசகசாவை வைத்து முகத்தை இப்படி கூட பளபளக்க செய்யலாமா...!
Can you make your face glow like this with poppy seeds
முடி உதிர்வை தடுக்க:
கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவைக் கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.

கரும்படை மாற:
கசகசாவை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து, அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி, சருமம் இயற்கை நிறம் பெறும்.
வடு மறைய:
சிறிதளவு கசகசா, சிறிய மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள்.15-20 நிமிடங்கள் உலற விடுங்கள். பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள்.
இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.
English Summary
Can you make your face glow like this with poppy seeds