பேரவலம்! பெருந்துயரம்! அதிர்ச்சி வீடியோ! திமுக அரசு வெட்கப்பட வேண்டும் - கொந்தளிக்கும் நயினார்!
Kallakuruchi govt hospital DMK BJP Nainar Nagendran
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை தொட்டில் இல்லாததால், குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.
பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு
திமுக அரசு வெட்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Kallakuruchi govt hospital DMK BJP Nainar Nagendran