10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு! மகிழ்ச்சியில் ஊழியர்கள்! - சென்னை வண்டலூர்
Anaconda snake gives birth to 10 baby snake Staff overjoyed Chennai Vandalur
சென்னையில் வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் சுற்றுலாப்பயணிகளுக்காக பராமரிக்கப்படுகின்றன. இதனை நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

இதில், கடந்த 2020-ம் ஆண்டு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் சென்னை முதலை பண்ணையிலிருந்து ஒரு ஜோடி மஞ்சள் அனகோண்டா பாம்பு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டது. அந்த பாம்புகளை பூங்கா நிர்வாகம் தனியாக கண்ணாடி கூண்டில் அடைத்து பராமரித்து வருகிறது.
தற்போது நேற்று முன்தினம் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மஞ்சள் அனகோண்டா பாம்பு ஒன்று, 10 குட்டிகளை ஈன்றது. இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பூங்கா ஊழியர்கள் உடனடியாக பூங்கா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, 10 மஞ்சள் அனகோண்டா பாம்பு குட்டிகளையும், தாய் பாம்பிடம் இருந்து தனியாக பிரித்து அதனை ஒரு கூண்டில் வைத்து ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் 6 முதல் 7 அடி வரை வளரக்கூடியது.மேலும், அனகோண்டா பாம்புகளுக்கு கோழி குஞ்சுகள் இறைச்சியாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, புதிதாக பிறந்த அனகோண்டா பாம்பு குட்டிகள் நல்ல நிலையில் முதிர்ச்சியடைந்த பிறகு பொதுமக்கள் பார்வைக்காக விடப்படும் என்று பூங்கா அதிகாரி தெரிவித்தார்.
English Summary
Anaconda snake gives birth to 10 baby snake Staff overjoyed Chennai Vandalur