‘கரகம் ஏந்தி வரோம் பரம்பரை வாழணுமே! சித்திரை முழுநிலவு மாநாட்டை சிறப்பிக்க ‘திரௌபதி அம்மன்‘ பாடல் வெளியீடு!
PMK Vanniyar Chithirai Maanadu song 3
வரும் மே 11ம் தேதி திருவிடந்தையில் வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் நோக்குடன் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், இரு திணைகளுக்கு முன் மாநாட்டிற்கான லோகோவும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சித்திரை முழுநிலவு மாநாட்டை சிறப்பிக்க நம் குலம் காக்கும் ‘திரௌபதி அம்மன்‘ பாடலை அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
‘கரகம் ஏந்தி வரோம்
பரம்பரை வாழணுமே
நெருப்பில் ஆடி வரோம்
தீமை பொசுங்கணுமே
வரங்கள் தா தேவி பாஞ்சாலி' என ஆரம்பிக்கும் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
மாநாட்டு பாடல்கள்:
English Summary
PMK Vanniyar Chithirai Maanadu song 3