41 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த விஜய் மனிதாபிமானம் மிக்கவரா ? - துரைமுருகன் கேள்வி!
DMK Duraimurugan condemn to TVK Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் விஜய் அவர்கள், கரூர் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேசியதற்குத் தீவிரமான முறையில் பதிலளித்தார்.
மேலும், முதலமைச்சர் மனிதாபிமானம் இல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுகிறார் எனக் குற்றம் சாட்டி, தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
விஜய்யின் இந்தக் கருத்துக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தற்போது பதிலளித்துள்ளார். மேலும், துரைமுருகன் எழுப்பிய கேள்விகள்:
"41 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் மனிதாபிமானம் மிக்கவரா?"
"பாதிக்கப்பட்டவர் வீட்டிற்குச் சென்று நேரில் பார்க்காமல் இருந்த விஜய் மனிதாபிமானம் உள்ளவரா?"
"த.வெ.க. தலைவர் விஜய் மிகுந்த மனிதாபிமானம் உள்ளவரா? அப்படியானால், நாங்க (தி.மு.க.வினர்) மனிதாபிமானம் இல்லாதவர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யின் விமர்சனம் மற்றும் துரைமுருகனின் பதிலடி ஆகியவை தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
English Summary
DMK Duraimurugan condemn to TVK Vijay