குஷியில் சுற்றுலா பயணிகள்...! ஏற்காட்டில் ரம்யமான சாரல் மழை...!
Tourists in awe delightful shower rain in Yercaud
சேலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.மேலும், கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில், கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனால் ஏற்காட்டிலுள்ள பக்கோடா பாயிண்ட், கிளியூர் நீர் வீழ்ச்சி, படகு குழாம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, சேர்வராயன் கோவில், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட் உள்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்றும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து,மேலும் குளிர்ச்சி அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவுகிறது. நேற்று சாரல் மழையிலும் படகு குழாமில் குடும்பத்துடன் ஆனந்தமாக சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
மேலும், சேலம் மாவட்டம் சங்ககிரியில் நேற்று கன மழை கொட்டியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதில் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி என மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
English Summary
Tourists in awe delightful shower rain in Yercaud