கராச்சியில் 09 மாதங்களாக பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த நடிகை: போலீசார் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானிய திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (வயது 33). கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2015-இல் இருந்து பாகிஸ்தானிய சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சின்னத்திரை தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர்.

அவர் இறந்து கிட்டத்தட்ட 09 மாதங்கள் ஆகியுள்ளதாக அதிதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அவர் இறந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது கடைசி தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் அந்த தேதியுடன் நின்றுள்ளதாகவும் அதன் பிறகு அவர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

சினிமாவில் நடிப்பதற்காக ஏழு வருடங்களுக்கு முன்பே லாகூரை இருந்து ஹுமைரா கராச்சி வந்துள்ளார். அவர் தன்னுடைய குடும்பத்துடன் பெரிய அளவில் தொடர்பு இல்லாத நிலையில் அவ்வப்போது மட்டும் குடும்பத்தினரை சென்று சந்தித்து வந்துள்ளார். 

இதனால், ஹுமைரா இவ்வளவு நாட்கள் தொடர்பில் இல்லாததை பற்றி அவரது குடும்பத்தினரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஹுமைராவின் வீட்டிற்கு அருகில் இருந்த வீடு காலியாக இருந்ததால் அந்தப்பகுதியில் இருந்தவர்களுக்கும் பெரிதாக துர்நாற்றம் வீசவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் தான் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கொடும்மழை இருந்ததால் வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தற்போது அந்த வீட்டை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது நடிகை ஹுமைரா அங்கு இறந்து கிடந்த விஷயமே தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பாகிஸ்தானிய சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress found dead in Karachi locked house for 9 months


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->