கடலூர்-பண்ருட்டியில் இபிஎஸ் இன்று பிரச்சாரம்.!!
edappadi palanisamy campaign in cuddaloor pandruti road
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.கவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினமும், நேற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் இன்று கடலூர், பண்ருட்டி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதையொட்டி இன்று மாலை 4 மணியளவில் புதுச்சேரியில் இருந்து வரும் அவருக்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் .சி. சம்பத் தலைமையில் கடலூர் மாவட்ட எல்லையான, ரெட்டிச்சாவடியிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர், 4.45 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி மஞ்சக்குப்பத்தில் ரோடுஷோவாக சென்று மக்களை சந்தித்துவிட்டு, சீமாட்டி சிக்னல் அருகில் சிறப்புரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகிலும், மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகிலும், அண்ணா கிராமம் அம்பேத்கர் சிலை அருகிலும் சிறப்புரையாற்றுகிறார்.
எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை முன்னிட்டு கடலூர் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், அண்ணா கிராமம் பண்ருட்டி நெய்வேலி சாலைகளில் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான கட்சி கொடிகள், பேனர்கள் வைத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளில் கலைக்குழுவினர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமியை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்க உள்ளனர்.
English Summary
edappadi palanisamy campaign in cuddaloor pandruti road