ச்சீ...அச்சச்சோ... எவ்வளவு வெக்கக்கேடானது...! - பவன் கல்யாணை வறுத்தெடுத்து பிரகாஷ்ராஜ்
Oh my god how Prakashraj roasts Pawan Kalyana
ஆந்திரா மாநிலத்தில் மாநில மொழித்துறை பொன்விழா கூட்டத்தில் துணை முதல்- மந்திரி பவன் கல்யாண் பங்கேற்றார். இதில் அவர் தெரிவித்ததாவது,"தெலுங்கு எங்கள் தாய்மொழியாக இருக்கலாம், ஆனால் எங்கள் தேசிய மொழி இந்தி. வீட்டில் தொடர்பு கொள்ள தெலுங்கு உள்ளது.ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக மாறியது.

பஞ்சாபி பகத் சிங் நாட்டிற்காகப் போராடிய புரட்சியாளராக ஆனார். ராஜஸ்தானைச் சேர்ந்த ராணா பிரதாப் துணிச்சலின் அடையாளமாக ஆனார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் கலாம் இந்தியாவின் ஏவுகணை நாயகன் ஆனார். ஒவ்வொரு மொழியும் ஒரு வாழும் மொழி. இந்தி கற்கவேண்டும் இதில் எந்த தவறும் இல்லை.
அதிக அளவில் தென் மாநில மொழிப்படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகின்றன. இந்தியை கற்றுக் கொள்வதால் எந்த தீங்கும் ஏற்படாது" என்று தெரிவித்தார்.இந்த பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்த அளவுக்கு விற்கீறீர்களா?
ச்சீ... அச்சச்சோ... எவ்வளவு வெட்கக்கேடானது என பதிவிட்டார். மேலும் பவன் கல்யாண் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.மேலும், பிரகாஷ்ராஜின் இந்த பதிவு பவன் கல்யாண் ரசிகர்களை கோபமுடைய செய்துள்ளது. அவர்கள் எக்ஸ்தளத்தில் பிரகாஷ்ராஜிக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதில்,ஏய் அயோக்கியனே, உன்னைப் பார்த்தால் செருப்பால் அடிப்போம். படத்தில் நடித்த போது உண்மையிலேயே பவன் கல்யாண் உன்னை அடித்தாரா ஜாக்கிரதை என ரசிகர்கள் பதிவிட்டனர்.தற்போது நடிகர்கள் பவன் கல்யாண் மற்றும் பிரகாஷ்ராஜ் மோதல் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Oh my god how Prakashraj roasts Pawan Kalyana