தமிழனுக்கு பெருமை சேர்த்த திரு.சுந்தர் பிச்சை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
Happy birthday wishes to Mr Sundar Pichai who has brought pride to Tamilians
இன்று பிறந்தநாள் காணும் கூகுள் தலைமை செயல் அதிகாரி திரு.சுந்தர் பிச்சை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
தமிழரின் திறமையை உலகிற்கு வெளிக்காட்டிய கூகுளின் CEO சுந்தர் பிச்சை அவர்கள் 1972ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.
இவர் 2004-ல் கூகுளில் இணைந்தார். பிறகு கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராகவும், Chrome and apps-ல் மூத்த துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

2009-ஆம் ஆண்டு கூகுளின் Gmail and Google Maps போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். 2013-ல் சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
மேலும், கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில் (Product Chief) நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
விடாமுயற்சியோடு போராடி வெற்றிப்பெற்ற தமிழன் என்ற பெருமைக்குரிய இவர்.
English Summary
Happy birthday wishes to Mr Sundar Pichai who has brought pride to Tamilians