கூட்டம் பெருசு போல!!!போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் 3 திரைத்துறையினர் கைது...! 
                                    
                                    
                                    3 more film industry members arrested in drug case
 
                                 
                               
                                
                                      
                                            நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 இந்நிலையில், காவலர்கள் விசாரணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் நடுவே, கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், காவலர்கள் விசாரணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் நடுவே, கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் கடந்த வாரம், நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அரவிந்த் பாலாஜி மற்றும் சுபாஷ் இருவரை காவலர்கள் கைது செய்தனர்.
அதன் பிறகு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையே,கொக்கைன் போதைப்பாருள் பயன்படுத்திய விவகாரத்தில் திரைப்பட துணை இயக்குநர் உள்பட 3 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
மேலும், திரைப்பட துணை இயக்குநர் அலெக்ஸ் சந்தோஷ், ஸ்ரீபிரேம்குமார்,  ராஜன் ஆகியோரை கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
                                     
                                 
                   
                       English Summary
                        3 more film industry members arrested in drug case