பயணிகள் ரெயிலில் நடுநடுங்க வைத்த சம்பவம்...! - பெண்ணின் நகையை பறிக்க முயன்ற அரசு ஊழியர் கைது...! - Seithipunal
Seithipunal


நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு கடந்த 12-ம் தேதி சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில், கீழப்பாவூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி பயணம் மேற்கொண்டிருந்தார். ரெயில் தென்காசி நிலையத்தை எட்டிய தருணத்தில், அதே பெட்டியில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முனைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி உரக்கக் கூச்சலிட்டதும், பிடிபடுவோம் என்ற பயத்தில் அந்த நபர் ரெயிலிலிருந்து தாவி தப்பிச் சென்றார்.இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில், தென்காசி ரெயில்வே காவலர்கள் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

ரெயில்வே டி.எஸ்.பி. லட்சுமணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான சிறப்பு குழு காவலர்கள் விரைவான நடவடிக்கையில் இறங்கினர்.மேற்கொண்ட விசாரணையில், நகை பறிக்க முயன்றவர் தென்காசி மாவட்டம் குற்றாலம் கீழரத வீதியைச் சேர்ந்த 55 வயதான கருப்பசாமி என தெரியவந்தது.

மேலும், இவர் குற்றாலநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ் புலவராக பணியாற்றி வருபவர் என்பது தெரியவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கருப்பசாமியை காவலர்கள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரவிக்கப்படுகிறது.

அரசு ஊழியராகப் பணியாற்றும் ஒருவரே ரெயிலில் நகை பறிக்க முயன்ற சம்பவம், சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

incident that left passengers trembling train government employee who tried snatch woman jewelry arrested


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->