சென்னை வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய சடலம்...! பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை... சோகத்தில் குடும்பத்தினர்...!
body found hanging room Chennai house Famous YouTuber Savku Shankar 13 year old son committed suicide Family mourning
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் மனைவி ஆர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களது 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தில் வசிக்கும் தாய்வழி தாத்தா செந்தாமரைக்கண்ணன் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து, மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சிறுவன் சில நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தாயை சந்திக்கும் நோக்கில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தான். அங்கு சில நாட்கள் தங்கிய பின்னர் மீண்டும் நடுக்குப்பம் கிராமத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை பள்ளிக்குச் செல்லுமாறு பேரனிடம் தாத்தா, பாட்டி கூறிவிட்டு தங்களது பணிகளில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்தும் சிறுவன் வீட்டிற்குள் வராததால் சந்தேகமடைந்த அவர்கள், வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது, அங்கிருந்த வேப்பமரத்தில் சிறுவன் உயிரற்ற நிலையில் தொங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர். உயிரிழப்புக்கான சூழ்நிலைகள், பின்னணி மற்றும் அதற்கு வழிவகுத்த காரணங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
body found hanging room Chennai house Famous YouTuber Savku Shankar 13 year old son committed suicide Family mourning