மேலூர் அருகே உறங்கான்பட்டி ஊராட்சியில் தொடர் மழையால் குழும வீடுகள் இடிந்து விழும் அபாயம்; கிராம மக்கள் அச்சம்..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் உறங்கான்பட்டி ஊராட்சி மேலூர் - சிவகங்கை மதகுபட்டி சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் புலிமலைப்பட்டி, கல்லம்பட்டி, தூரதிரிபட்டி, தமட்டமலைபட்டி, அய்யமுத்தன்னம்பட்டி, குப்பிக்கிபட்டி, கொட்டாணிபட்டி, அழகிச்சிபட்டி, கண்மாய்பட்டி, புதுப்பட்டி, தருமசானப்பட்டி, உட்பட 14 கிராமங்கள் உள்ளன.

இதில் தர்மசானப்பட்டியில் 46 குழும வீடுகள் 1992-ஆம் ஆண்டு கட்டப்பட்டன. பழைய வீடுகள் என்பதால், தற்போது மேற்கூரைகள் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் மட்டும் காட்சி அளிக்கின்றன  பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

 இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இதில் சில வீடுகள் கடந்த சில நாட்கள் தொடர்ந்து பெய்யும் மழைக்கு சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன. 

இது குறித்து தர்மசானப்பட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளதாவது; ''தர்மசானப்பட்டியில் ஆதிதிராவிடர்களுக்கென 1980-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு செய்து 1992-இல் 46 குழும வீடுகள் கட்டித்தரப்பட்டன. அதில் 21 வீடுகள் வாழத் தகுதியற்ற நிலையில் உள்ளன. இது குறித்து நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், கடந்த 2024-ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் கூட்டாக வந்து கணக்கெடுத்து, கிராமப்புற வீடுகளை பழுதுபார்க்கும் திட்டத்தில் 21 வீடுகளை கணக்கெடுத்ததாகவும்,  ஆனால், அதற்குப் பிறகு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வீடுகளை பராமரிப்பு நிதி ஒதுக்கவில்லை என்றும், தற்போது பெய்த மழைக்கு சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், அருகிலுள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறதாகவும், இது குறித்து வருவாய்த் துறையினருக்கு புகார் அளித்துள்ளோம். பல வீடுகளில் மேற்கூரை பெயர்ந்து இரும்புக் கம்பிகள் காட்சியளிக்கின்றன. எப்போது விழுமோ என்ற அச்சம் உள்ளது. தற்போது பெய்த மழைக்கு உயிரை கையில் பிடித்து வாழ்ந்து வருகிறதாக வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கி புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததோடு, உறங்கான்பட்டி ஊராட்சியில் 14 உட்கடை கிராமங்கள் உள்ளன. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கின்றனர். இதனை 2 ஊராட்சிகளாக பிரித்தால்தான் திட்டங்கள் மக்களை சென்றடையும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், மதுரையிலிருந்து 50 கி.மீ தூரத்தில் தங்களது கிராமம் உள்ளதால் ஆட்சியர் அலுவலகத்துக்கு எங்களது குறைகள் எட்டவில்லை என்று கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Uranganpatti Panchayat near Melur a cluster of houses is at risk of collapse due to continuous rain


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->