டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கிக்கப்பட்டுள்ள அமித் மிஸ்ரா..!
Amit Mishra has been appointed as the spin bowling coach for the Delhi Capitals team
ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக அமித் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளர் குழுவில் சமீபத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, சவுரவ் கங்குலி (தலைமைப் பயிற்சியாளர்), யுவராஜ் சிங் (உதவிப் பயிற்சியாளர்) மற்றும் சமிந்த வாஸ் (வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர்) ஆகியோருடன் தற்போது சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக அமித் மிஸ்ராவும் இணைந்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் தொடக்க ஆண்டான 2008 முதல், 16 சீசன்களில் மொத்தம் 162 போட்டிகளில் அமித் மிஸ்ரா விளையாடியுள்ளார். தனது ஐ.பி.எல் பயணத்தை டெல்லி அணியில் தொடங்கிய அவர், அந்த அணிக்காக மட்டுமே 10 சீசன்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2024-இல் விளையாடிய அமித் மிஸ்ரா, ஐ.பி.எல் வரலாற்றில் மொத்தம் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் (இதில் ஒரு முறை 05 விக்கெட்டுகளும் அடங்கும்).
ஐ.பி.எல் வரலாற்றில் 03 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையும் இவரையே சாரும்; குறிப்பாக, மூன்று முறையும் வெவ்வேறு அணிகளுக்காக (2008-இல் டெல்லி, 2011-இல் டெக்கான் சார்ஜர்ஸ், 2013-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
டெல்லி அணியில் புதிதாக இணைந்திருக்கும் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஜீஷான் அன்சாரி மற்றும் லெக்-ஸ்பின்னிங் பந்துவீச்சாளர்கள் விப்ராஜ் நிகாம், ரெஹான் அகமது போன்ற இளம் வீரர்களுக்கு அமித் மிஸ்ராவின் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Amit Mishra has been appointed as the spin bowling coach for the Delhi Capitals team