''ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்''; மார்க்சிஸ்ட் பெ.சண்முகம்..!
Marxist P Shanmugam states that the BJP government which is steered by the RSS must be ousted from power
'' ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்றுதான் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் ஏதோ பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது போலவும், அதைக் கவிழ்க்க நாங்கள் போராடுகிறோம் என்றும் திசை திருப்ப வேண்டாம்'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வினையாற்றியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்துக்கான போராட்டங்கள் என்றும், அது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்காது என்றும் விஜயதசமி விழாவில் பேசியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்றுதான் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நடைபெறும் போராட்டங்கள் வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளுக்காக நடைபெறுகின்றன என்பது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும்.
எனவே, நீங்கள் ஏதோ பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது போலவும், அதைக் கவிழ்க்க நாங்கள் போராடுகிறோம் என்றும் திசை திருப்ப வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Marxist P Shanmugam states that the BJP government which is steered by the RSS must be ousted from power