அக்டோபர் 23 வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும்; நாளை டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


அக்டோபர் 23-ஆம் வங்கக் கடலில் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெறும் என்றும், தமிழகத்தில் நாளை (அக்.22) டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அக்.23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், இது புயலாக வலுப்பெறக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன், தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்டாபர் 22) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, வரும் 23-ஆம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.

தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தில் காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, சென்னை எம்ஜிஆர் நகரில் 15 செ.மீ., வடபழனியில் 14 செ.மீ., சைதாப்பேட்டை, சென்னை விமானநிலையம், ஆலந்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் தலா 13 செமீ, சென்னை மீனம்பாக்கம், டிஜிபி அலுவலகம், மடிப்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய இடங்களில் தலா 12 செமீ மழை பதிவாகியுள்ளது.

அத்துடன், எல் நினோ தாக்கத்தால் வடகிழக்கு பருவமழை குறைய வாய்ப்பில்லை என்றும் அதிகமாகவே பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 44 செமீ மழை கிடைக்கும். இந்த ஆண்டு அக்.21-ஆம் தேதி வரை 11 செமீ மழை கிடைத்துள்ளது. 

இது வழக்கத்தை விட 12 சதவீதம் அதிகம். வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மழை மானிகளின் தரவுகள் முரண்பட்டு இருப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A low pressure area forming in the Bay of Bengal on October 23 is set to intensify into a cyclonic storm


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->