திருமுல்லைவாயல் அருகே சோகம்...! எதிர்திசையில் வந்த பேருந்து மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாப உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னை செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனஞ்செயன் (28), கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் திருமுல்லைவாயலில் இருந்து ஆரிக்கம்பேடு பிரதான சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

தனஞ்செயன் திருமுல்லைவாயல் எட்டியம்மன் கோவில் அருகே சென்றபோது, எதிர்திசையில் வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தனஞ்செயன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், விபத்தில் தொடர்புடைய தனியார் பேருந்தை ஓட்டி வந்த முகப்பேரைச் சேர்ந்த பாபு என்பவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy near Thirumullaivayal youth hit by bus coming from opposite direction and tragically died spot


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->