டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கத் தீவிரம்...! சென்னை முழுவதும் அதிரடி மருத்துவ முகாம்கள் அமைப்பு...! - Seithipunal
Seithipunal


சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, திருவொற்றியூர் பகுதியில் சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவது மாநகராட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி சார்பில் மருத்துவர்களைக் கொண்டு மொத்தம் 103 இடங்களில் இந்த முகாம்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுபவர்கள் அலட்சியம் காட்டாமல், அருகிலுள்ள மருத்துவ முகாம்களை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Efforts to prevent the spread dengue and viral fever Organized medical camps across Chennai


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->