சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை...! எந்தப் பகுதியில் அதிகபட்சமாக மழை கொட்டித் தீர்த்தது தெரியுமா...? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுப்பெற்றுள்ளதால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதற்கிடையே, வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகும் சூழல் நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் தாக்கமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்தது. குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

தொடர் கனமழையைக் கருத்தில் கொண்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரிகளின் நீர்வரத்து மற்றும் நீர்மட்ட நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கடந்த 24 மணி நேர மழைப்பதிவு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் குறிப்பிடத்தக்க அளவில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:

- மதுரவாயல் – 11.4 செ.மீ.
- வளசரவாக்கம் – 11.3 செ.மீ.
- நெற்குன்றம் – 11 செ.மீ.
- வடபழனி – 13.5 செ.மீ.
- சைதாப்பேட்டை – 12.7 செ.மீ.
- மீனம்பாக்கம் – 12 செ.மீ.
- மடிப்பாக்கம் – 11.6 செ.மீ.
- நுங்கம்பாக்கம் – 10 செ.மீ.
- அடையாறு – 10 செ.மீ.
தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மழைநீர் தேங்கும் இடங்களில் உடனடியாக நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rains lashed Chennai day and night Do you know which area received most rain


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->