சாலையின் குறுக்கே திடீரென உருண்டு விழுந்த இரண்டு ராட்சத பாறைகள்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் வால்பாறை அருகே நேற்று இரவு திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சாலையின் குறுக்கே உருண்டு விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் வாகனங்கள் எதுவும் சென்று கொண்டிருக்காத நேரத்தில் பாறைகள் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், சாலையின் நடுவே பாறைகள் கிடந்ததால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.சாலையில் விழுந்த பாறைகளை உடனடியாக அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

பாறைகள் சாலையை ஆக்கிரமித்திருந்ததால், அவற்றைக் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two giant rocks suddenly rolled across road What happened


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->