தங்கம் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்...! - ஒரே நாளில் அதிரடியாகக் குறைந்தது தங்கம் விலை...!
Very happy news for gold buyers Gold prices drop dramatically single day
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.640-ம், கிராமுக்கு ரூ.80-ம் உயர்ந்திருந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.
நேற்று ஒரு சவரன் ரூ.1,07,920-க்கும், ஒரு கிராம் ரூ.13,490-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய விலை மாற்றம் நகை வாங்கத் திட்டமிடுவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.100 சரிந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,390-க்கு விற்பனையாகிறது.
ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த விலைக் குறைவு, தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு முக்கியமான மாற்றமாக அமைந்துள்ளது.வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளி, இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.230-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரு உலோகங்களின் விலைகளும் இன்று குறைந்துள்ளதால், நகைச் சந்தையில் விலை மாற்றங்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.
English Summary
Very happy news for gold buyers Gold prices drop dramatically single day