கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகள் கைதுக்கு எதிராக அக்.24-இல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு..!
NTK announces a state wide protest on Oct 24 against the arrest of its office bearers
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெறும் 5268 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியுற்றவர் வேட்பாளர் கார்த்திகா.
நேற்று காலை கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து தவெக அரசுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் வரும் சனிக்கிழமை (அக்.24) அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளரும் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்திகா, அவரது கணவரும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக.சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை.மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்து சிறைப்படுத்தி இருக்குக்கிறது தவெக அரசு.
இந்த அடக்குமுறையைக் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற ஐப்பசி 07ஆம் நாள் 24-10-2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
NTK announces a state wide protest on Oct 24 against the arrest of its office bearers